சோதிடம்: பிரம்மஹத்தி தோசம்

இப்பதிவு ஆன்மிக அன்பர்களுக்காக மட்டும், பிரம்மஹத்தி தோசம் தொடர்பாக இணையத்தில் இருக்கும் கீழ்கண்ட முக்கிய பதிவுகளின் தொகுப்பாகும்.
  • https://www.facebook.com/photo.php?fbid=1832203203488110&set=a.848171245224649.1073741827.100000953444539&type=3
  • https://www.facebook.com/josyam.ramu/posts/2006684396215167
  • http://www.astrosuper.com/2017/04/blog-post_59.html
  • http://moonramkonam.com/jothidam-brammahathi-dosham-parikaram/#.UdrUgTs3u5x
  • http://www.yourastrology.co.in/news/pirammagaththithosamneega-astrology.html
  • http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=11106&cat=3
  • https://www.facebook.com/316013718429497/photos/a.495522597145274.115922.316013718429497/870049253025938/?type=3
  • https://www.vikatan.com/news/spirituality/98438-what-is-the-cause-of-brahmahati-dosham-and-what-are-the-appropriate-remedies.html
  • http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/176/176.html
  • http://kanniii.blogspot.in/2015/09/blog-post_42.html

ஜாதக அமைப்பு

  • பிரம்மஹத்தி தோசம் பல்வேறு முறைகளில் கணிக்கப்படுகிறது.
  • முறை 1: குரு பலமிழந்து சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.
  • முறை 2: குருவும் சனியும், மேஷத்தில் ஒரே நக்ஷத்திர பாதத்தில் ( 3.33 பாகைக்குள் [ 3 பாகை 20 கலை])   இணையும் போது மட்டுமே ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. மற்ற ராசிகளில் இணையும் போது அது குருசண்டாளயோகம், தோஷம் எனப்படும். 
  • முறை 3: ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 - ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும்  (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் அல்லது 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.
  • முறை 4: பிறந்த ஜாதக ரீதியாக குரு சனி இணைந்து இருந்தாலோ, (நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும்) அல்லது வேறு எந்த தொடர்பு பெற்றிருந்தாலும் (இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ (குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும்), சப்தம பார்வை பெற்றாலோ, குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும் )  பிரம்மஹத்தி தோஷமாகும்.
  • முறை 5: லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும்,  5, 9 - ம் வீடுகளுக்கு  அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.
  • சூட்சுமம்

  • குருவின் பலம் அதிகம் இருந்து, சனி குருவுடன் இணையும் போதோ அல்லது சம சப்த பார்வை பெறும் போதோ, சனியின் அசுப தன்மை குறைந்து சுப தன்மை அடையும். அதே நேரத்தில் குருவின் பலம் சிறிது குறையும். இதில் இருந்து அறியும் சூட்சுமம் என்னவென்றால் முன்னோர்கள் செய்த பூர்வ பலன்களின் (குரு) பலம், முன்னோர்களின் கர்ம பலன்களை (சனி) விட பலம் பெற்று, சனி தரும் அசுப பலன்களை குறைகிறது என்பதே சூட்சுமம்.
    இதனால் ஜாதகன் நினைத்த அனைத்தும் கடவுள் அருளால் கிடைக்க பெற்று, நல்ல நிலையில் இருக்க வைக்கிறது.
  • இங்கே சனி பலம் அதிகமாகி குரு பலம் குறையும் போது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற பூர்வபல குறைபாடு ஏற்படுகிறது. இதனால் கர்ம பலம் அதிகமாகி, குரு பலம் குறைகிறது. இதுவே பிரம்ம ஹத்தி தோஷம்.
    ஆனால் இந்த தோஷம் மிக அரிதாகவே ஜாதகத்தில் காணலாம். ஏனெனில் குரு அவ்வளவு சீக்கிரம் பலமிலப்பதில்லை.

காரணங்கள்

'ஹத்தி' என்றால் 'மாய்த்தல்' என்று பொருள். ஹத்தியில் பல வகைகள் உண்டு.
இதன்படி அறிந்தோ, அறியாமலோ எதையேனும் மாய்ப்பதால் ஏற்படும் தோஷம் பிரம்ம ஹத்தி தோஷம். இதே போன்று போரில் ஒருவரைக் கொன்று விட்டால் வீரஹத்தி தோஷம் என்றும், கருவைக் கலைத்தால் ப்ரூணஹத்தி தோஷம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லமை படைத்தவன். அதுவும் சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகராக எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ‘சாயாஹத்தி தோஷம்’ ராமரை பற்றிக்கொண்டது.
மானுடர்களுக்குப் பல்வகைகளில் ஏற்படும் ஹத்தி தோஷங்கள் - 'ஹத்தி மூலை அல்லது அத்தி மூலை' - என்பதாய் அவரவர் உடலில் ஒரு மூலையில் பதிந்திருக்கும். தக்க பரிகார, பிராயச் சித்தங்கள் மூலம், இத்தகைய ஹத்தி (மூலை) தோஷங்களை அகற்றிட வேண்டும்.
'ஹத்தி மூலையே' வழக்கில் அத்தி மூலை என்றாயிற்று. ஜாதகத்தில், தோஷங்களை இத்தகைய 'அத்தி மூலைக் கோணம்' வகுப்பு மூலமாய் அறிவர்.
பிரம்மஹத்தி தோஷத்திலும் கூட - பகல் நேர ஹத்தி தோஷம், இரவு நேர ஹத்தி தோஷம் - என்ற காலவகை நுட்பம் உண்டு


உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் இறைவனால் (பிரம்மனால்) படைக்கப்பட்டதுதான்.அந்த உயிர்களுக்கு யார் தீங்கு விளைவித்தாலும்,அந்த உயிரின் மனதை நோகடித்தாலும்,நம்பிக்கை துரோகம் செய்தாலும் அதனால் நமக்கு ஏற்படும் தோசம் பிரம்மஹத்தி தோசமாகும்.  முன்னோர்கள் செய்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும்.
  • ஒரு உயிரை வதைத்த பாவத்தை அல்லது அதற்கு தவறானமுறையில் வழிகாட்டியாக இருக்கும் பாவமே, பிரம்ம ஹத்தி தோஷம். 
  • எக்காரணத்திற்காகவும் உயிர்களை கொல்லும் பொழுது இந்த பிரம்மஹத்தி தோசம் பற்றுகிறது. இத்தோசமானது பெரும் பாவமாகவும், தலைமுறைகளை கடந்தும் இப்பாவம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. [2]
  • இரு விதமான ஆன்மீக சக்திகளின் ஐக்கிய அனுபூதிதான் சந்தான ப்ராப்தி எனும் பிள்ளைப் பேறாய்க் கனிகின்றது. ஒரு பறவை முட்டை இடுவதும், மீன் குஞ்சு பொறிப்பதும், மனிதனுக்குக் குழந்தை பிறப்பதும் அனைத்துமே திவ்யமான புண்யவாழீ அனுபூதிகள் தாம். இந்நிலையிலே, கருக்கலைப்பு துaதிருஷ்ட வசமாய் நிகழுமாயின், இந்த அதர்மச் சம்பவமானது, உயிர் வதையாவதால், பெரும் பாவச் செயலோடு, பிரம்மஹத்தி தோஷமாயும் கூட்டி வருகின்றது.
  • குறிப்பாக நன்றி மறப்பதால்தான்  இந்த தோஷம் ஏற்படுகிறது.
  • *அடுத்தவர் மனதை நோகடிப்பது.
  • தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது
  • *வாக்கு கொடுத்து ஏமாற்றுதல்.
  • உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது
  • பண மோசடி செய்தலும், ஊரை அடித்து உலையில் போடுதலும் பிரம்மஹத்தி தோஷமாக வெளிப்படும்.
  • *பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது.
  • *பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றுவது. பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து, திருமணம் செய்யாமல் இருத்தல்
  • பிறரின் வாழ்க்கைத்துணையுடன் முறையற்ற உறவு கொள்ளுதலும், கர்ப்பிணிப் பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொள்ளுதலும்,
  • கணவனை மனைவி உறவுக்கு அழைத்து சம்மதிக்காவிட்டாலும்,மனைவியின் குறிப்பறிந்து அவரின் தேவையை நிவர்த்தி செய்யாமல் செய்யாமல் இருந்தால் பிரம்மஹத்தி தோசம்.
  • குருவை உதாசீனப்படுத்துவது, குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுவது
  • பசுவைக் கொல்வது, வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
  • சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்
இந்த செயல்கள் செய்தவர்களுக்கு தோஷ்ம் பீடித்துவிடும்.

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

  •  இந்த தோஷம் ஆண் – பெண் இருபாலருக்கும் வருவது உண்டு. தோஷங்களுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது.
     வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது. இந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
    திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
    குழந்தைப் பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்
    தீராத கடன் தொல்லை , கல்வித் தடை ,
    வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும், கனவுத் தொல்லைகள்
    மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்
    தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்,
    தீராத கடனும் பகையும் உண்டாகும்.
    குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது குடும்பத்தில் நிம்மதியே இருக்காது.
இந்த தோசம் பிடித்த முக்கியமானவர்கள்.
  • *ராமபிரான்(ராவணனை கொன்றதால்)
  • *பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
  • *சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது
  • வீரசேனன்வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.[6]

பரிகாரம்


  • சம்பந்தப்பட்ட ஜாதகர் எந்த தசா புக்தியில் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். 
  • ப்ரம்மஹத்திதோஷம் ஜாதகரை தாக்கும் காலகட்டமாக குருதசை, சனிபுக்தி காலமாகவும், சனிதசை, குருபுக்தி காலமாக கொள்ளலாம். சிலரது வாழ்க்கையில் குருதசை, சனிதசை ஆகியன வராமலே போகலாம்.
  • அல்லது வேறு முறைகளில் ஏற்ப்பட்டால். 6ஆம் அதிபதியின் தசையில் அந்த நிலை ஏற்பட்டதா? அல்லது 8க்கு உரியவனின் தசையில், 6ஆம் அதிபதியின் புக்தியில் அது நிகழ்கிறதா? என்பதைப் பொறுத்து பரிகாரம் மேற்கொள்ள வேண்டும். 
  • தோஷம் விலகவேண்டும் அவ்வளவுதானே என அப்போதைக்கென்ன, இப்போதே செய்துவிடலாம் என கொண்டு ஜாதகதோஷ பரிகாரவழிபாடுகளை நம் விருப்பத்திற்கு வளைத்துக்கொள்வது மிகத்தவறாகும். 
  • பரிகாரவழிபாடுகளின் தத்துவமே செய்த பாவங்களுக்கு மனம் திருந்தி மன்னிப்பை இறைவனிடம் கோருவது என்பதாகும். இதை நாம் உணராமல் போனோமானால் இந்து தர்ம வழிபாடுகளை வகுத்து தந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். எனவே ஜாதகர் காலமறிந்து தோஷபரிகாரம் மேற்கொள்வது சிறந்த வழியாகும். இவைகள் மட்டுமல்லாமல், ஜாதகப்படி தோஷபரிகாரம் செல்லுபடியாகுமா? என்று ஆராய்வதும் முக்கியம்.
  • ஆனால் அடுத்தடுத்து பிரம்மஹத்தி தோஷம் ஏற்படாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பரிகாரம் இருக்கிறது என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் அதனை செய்து கொள்ளலாம் என பொருள் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் அந்த பாவங்களுக்கு உண்டான பலனை அனுபவித்தாக நேரிடும்.
  • சிவ பெருமானை வணங்கினால் அவர் நமது கர்மவினைகளை அழிப்பார். நமது பாவங்கள் நீங்கினால் தானாகவே நமது தோஷங்களும் நீங்கி விடும். ராமபிரானும் சிவ பெருமானை வணங்கியே பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதை ராமாயணம் கூறும்.


பொதுவாக பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் மேற்கொள்ள விரும்புபவர்கள்குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டுராமேஸ்வரம்காசிகயாகங்கை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் நீராடிஇறைவனை வணங்கி,பிண்டங்களை அளித்தால் பலன் பெறலாம்.
  1. பிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர்கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.  பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.
    திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப்புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து  முழங்கால் மேல்  முகத்தை வைத்துக் கொண்டு , காத்திருப்பது தான் பிரம்மஹெத்தி.
    பிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போட்டு விட்டு அர்ச்சனை  செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல்,மகாலிங்க சுவாமி சன்னதி சென்று,நெய் தீபம் ஏற்றி குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும். மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாபிடக் கூடாது. காற்று,உப்பு,நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் பிரம்மஹெத்தியிடம் போய் சேர்கின்றன.
    கடுமையான பிரம்மஹத்தி தோசத்திற்கு  தேவஸ்தான அலுவலகத்தில் ரூ.  500/-  செலுத்தி முறையாகப் பரிகாரங்களும் சாதாரண பிரம்மஹத்தி தோசத்திற்கு ரூ 50/- செலுத்தி, எளிய முறையில் பரிகாரங்களும் காலை 7 மணி முதல் 11 மணீக்குள் செய்து கொள்ள வேண்டும்.
    ஆலயத்திறப்பு  நேரம்:  காலை 5.00 மணி முதல் பகல் 12.30  மணி .மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி.
    வழித்தடம்:  கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் 20கி.மீ. தொலைவில் உள்ளது
  2. பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்த  ஸ்ரீராமபிரான்,  பிரம்மஹத்தி தோஷத்தைக் கழிப்பதற்காக  ஒரு இடத்தை தேர்வு செய்தார்.   ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் .
  3. ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடிசெல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
    ஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.
  4. தீராத நோய், தொழில்,உத்தியோக பிரச்சனை புத்திசுவதினம்இல்லாமல் இருப்பது மனநிம்மதி பாக்கியாதிபதி தோஷம் செய்யாத தவறுக்கு பழியைப் பெறுவது பரிகாரம் ராமேஸ்வரத்தில் (பௌர்ணமி / பஞ்சமியில் செய்து கொண்டால் பரிபூரண பலன் கிட்டும்) 
    பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
  5. வட நாட்டில் இருப்போர் பிரம்மஹத்தி தோசம் நீங்க இங்கு ராமேஸ்வரம்  வருகின்றனர் அது போல நாமும் பிரம்மஹத்தி தோசம் நீங்க கஷ்டப்பட்டு வட நாட்டில் தரிசனம் செய்வதுதான் தோசம் நீங்கும் முறையாகும்..அதற்கு திருவேணி சங்கமம் வழிபாடுதான் சரியான தோசம் நீங்கும் பரிகாரமாக இருக்க முடியும்.
  6.  இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது. தேவிப்பட்டினம் செல்ல முடியாதவர்கள் கீழ்க்கண்டவாறு பரிகாரம் செய்யலாம்.
    தோஷத்தினை போக்க உகந்த நாள் அமாவாசை தினம் ஆகும். அமாவாசை தினத்தில் முன்னோர் கடனை தீர்த்த பின்பு பசுமாட்டிற்கு உணவளித்தல் வேண்டும்.
    பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
    நல்லெண்ணெய்-1/2 லிட்டர்;
    விளக்கெண்ணெய்-1/2 லிட்டர்;
    நெய் 1/2 லிட்டர்;
    இலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;
    வேப்பேண்ணெய்-1/2 லிட்டர்;
    மேல்லே கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.  இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்அ து தவிர  கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்.
    1. பலிபீடம்;
    2. கொடிமரம்;
    3. கொடிமர நந்தி
    4.அதிகார நந்தி;
    5. வாயில் கணபதி;
    6. துவார பாலகர்;
    7.சூரியன், சந்திர பகவான்;
    8. சமயக் குரவர்கள்;
    9. சப்த கன்னிமார்கள்;
    10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;
    11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;
    12. சுர தேவர்;
    13. ஸ்வாமி  அய்யப்பனின்  சாஸ்தா பீடம்;
    14. தட்சிணாமுர்த்தி
    15. கால பைரவர்;
    16. சண்டிகேஸ்வரர்;
    17. சனீஸ்வரர்;
    18. சிவன் சன்னிதி;
    19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.மேற்கூறப்பட்டவிதமாக விளக்கேற்றிவிட்டு,  அர்ச்சனையும் செய்யவேண்டும். அர்ச்சனை செய்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த முறையில், அதாவது, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும், வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஊதுவத்தி, சூடம், தேங்காய், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பூமாலை ஆகிய பொருட்களை வைத்து அர்ச்சகர் மூலம்  அர்ச்சனை செய்ய வேண்டும்.அதன் பின்னர் 9 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். பின்னர் 9 பேருக்கு ஆடைகள் தானம் செய்ய வேண்டும். அதன் பின்பு எந்த கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு 9 அமாவாசைகள் செய்ய வேண்டும்.
    இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.
  7. செய்ய முடியாத ஏழைகளுக்கும் வழி இருக்கிறது. அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கிவரவேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கினால், சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார். ஆனால், வசதிபடைத்தவர்களும், ஓரளவு வசதி படைத்தவர்களும்,  இந்த பரிகாரத்தை மேற்கொண்டால், பலன் கிடைக்காது. ஏழைகள் மட்டுமே இவ்விதம் செலவில்லாத பரிகாரத்தை செய்யலாம்.
  8. சிவபுராணத்தின் கூற்றுப்படி ஒரு முக ருத்ராட்சத்தினை கண்டாலே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் காணும் ஒரு முக ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தற்போது ஒரு முக ருத்ராட்சம் என்ற பெயரில் போலிகள் தான் விற்கப்படுகின்றன என்பதே உண்மை.
  9. சிவபுராணத்தின் கூற்றுப்படி ஆறுமுக ருத்ராட்சத்தினை அணிந்து கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் வாங்கி அணியும் ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கடையில் கிடைக்கும் ஆறுமுக ருத்ராட்சத்தினை வாங்கி அப்படியே அணிதல் கூடாது.
  10. சாளக்கிராமங்களை முறைப்படி பூசித்து வந்தால் இறைவன் அருளால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் சாளக்கிராம வழிபாட்டு முறைகளை தகுந்த குருவினை நாடி தெரிந்து கொண்ட பின்னரே பூசித்து வர வேண்டும். சாளக்கிராமங்களில் பல வகைகள் உண்டு. அவரவருக்கு பிடித்தமான சாளக்கிராம வழிபாடு
  11. பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் பல உண்டு.
    காசி
    காஞ்சிபுரம்
    திருவண்ணாமலை
    இராமேஸ்வரம்
    மதுரை
    திருவாஞ்சியம்
    பிரம்மதேசம்
    மேல்மலையனூர்
    ஆகியன முக்கியமானவை ஆகும்.

முறை 2 : திருமாலை மட்டும் வணங்குபவர்களுக்கான பரிகாரம்
  1. சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர  ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது  அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும்.
  2. உத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.
  3. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும்.
  4. திருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.
முறை 3

  • அதர்மமாய் ஆட்சி புரிந்து, கோடிக் கணக்கானோரை வதைத்த அரக்கனான ராவணனை ஸ்ரீ்ராமர் மாய்த்தது அவதார தர்ம காரியம். எனினும், இலங்கைப் போரில் எண்ணற்றோர் மாய்ந்தமையால், ஸ்ரீ்ராமருக்கும் கூட பிரம்ம ஹத்தி, சாயாஹத்தி, வீரஹத்தி போன்ற தோஷங்கள் ஏற்பட்டன. மேலும், தம் பரிவாரங்களைச் சார வேண்டிய தோஷங்களையும், பொறுப்புள்ள படைத் தலைவராய் ஸ்ரீ்ராமர் தம்முள் ஏற்றுக் கொண்டார் என்றும் விளக்குவதுண்டு.
  • இத்தகைய பிரம்ம ஹத்தி, சாயாஹத்தி, வீரஹத்தி தோஷங்களைக் களைவதற்காய், ஸ்ரீ்ராமர் தம் குலகுருவின் வாக்கின்படி, ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை, சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை ,வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திரு மறைக்காடு) என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.
  • பிரம்ம ஹத்தி தோஷம் முற்றிலும் அகல வேண்டுமாயின், பிரம்ம லோகத்து தேவதா மூர்த்திகளின் அனு கிரகத்தையும் பெற்றாக வேண்டும். இது தோஷ வகைக்கான நிவர்த்தியை எளிதாக்கித் தருவதாம். இதனை எவ்வாறு சாதிப்பது?சாட்சாத் பிரம்ம மூர்த்தியே நிறுவிய -அடி அண்ணாமலைத் திருக்கோயிலைக் கொண்ட - திரு அண்ணாமலையில் ஆற்றும் அருணாசல கிரிவலம், இதற்குப் பெரிதும் உதவும். பிரம்ம மூர்த்தி தனித்துச் சன்னதி கொண்டருளும் தலங்கள் திருச்சி அருகே உத்தமர் கோயில், தஞ்சாவூர் அருகே கண்டியூர், திருச்சி-சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் போன்று ஒரு சிலவே. இவற்றில் பிரம்ம சக்தி நாட்களில், 24/36/64/108 பசு நெய் தீபங்களை ஏற்றி, கோ (பசு) பூஜை ஆற்றி வருதல் - கோஹத்தி போன்ற ஹத்தி தோஷ நிவர்த்திக்கான பிரம்ம லோகத்து மூர்திகளின் அருளைத் திரட்டித் தரும்.
  • நரகாசுரனைக் கொன்றதால், விஷ்ணுவுக்கு வீரஹத்தி தோஷம்ஏற்பட்டது. இந்த தோஷம் ஏற்பட்டால் உடலும், முகமும் களை இழந்து விடும். இதைப் போக்க என்ன வழி என, சிவபெருமானிடம் ஆலோசனை கேட்டார்.  "இந்த சம்பவம் நிகழ்ந்தது துலா மாதத்தில். இந்த மாதம் முழுவதும், சூரிய உதயத்தில் இருந்து, ஆறு நாழிகை (144 நிமிடம்) வரை, இவ்வுலகிலுள்ள, 66 கோடி தீர்த்தங்களும் காவிரியில் வாசம் செய்யும். அந்த நேரத்தில் அதில் நீராடினால் தோஷம் நீங்கும்...' என்றார். விஷ்ணுவும் அவ்வாறே நீராடி, தோஷம் நீங்கப் பெற்றார். தன் மைத்துனருடன் சிவனும் நீராட அங்கே வந்தார். சிவ விஷ்ணு தரிசனத்தை ஒரே நேரத்தில் பெற்ற மகிழ்ச்சியில், எல்லா தேவர்களும் நீராடினர்.


1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)